Foolish fox || Tamil story

                     முட்டாள் நரி



   ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது அது தினமும் காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடி தனக்கு உணவாக உட்கொண்டு வந்தது .

   அதே காட்டில் நரி ஒன்றும் வாழ்ந்து வந்தது அந்த நரி ஒரு நாள் உணவு தேடி அலைந்து திரிந்தது அதற்கு உணவு ஏதும் கிடைக்கவில்லை.

    உணவு கிடைக்காத சோகத்தில் உடல் தளர்ந்து போய் நடந்து கொண்டிருந்தது. திடீர் என்று ஒரு சத்தம் கேட்டது. அங்கே சிங்கம் ஒன்று வேட்டையாடிய உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தது. நரி அதை மறைந்து பார்த்தது.



   சிறிது நேரம் கழித்து சிங்கம் முடிந்த வரை சாப்பிட்டு விட்டு மீதியை அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டது. அதை மறைந்து இருந்து பார்த்த நரி சிங்கம் போனவுடன் எஞ்சி இருந்த உணவை சாப்பிட்டு விட்டு சென்றது.

   அப்போது நரி ஒரு தந்திரம் செய்தது இனி நம்மால் உணவு தேடி அலைய முடியாது இந்த சிங்கத்துடன் நட்பு வைத்துக் கொண்டால் சிங்கம் மீதம் விடும் உணவை நாம் சாப்பிட்டு நம் காலத்தை கழித்து விடலாம் என்பது தான் அந்த திட்டம்.

சோம்பேறி கழுதை click here

   அந்த திட்டத்தை நிறைவேற்றியது நரி சிங்கத்திடம் நட்பு கொண்டது. நரி சிங்கத்திடம் சென்று நீங்கள் இனி கஷ்டபட வேண்டாம் நான் சென்று எங்கு விளங்குகள் இருக்கிறது என்று பார்த்து வருகிறேன் நீங்கள் சென்று வேட்டையாடி விடலாம் என்றது. சிங்கமும் அதற்கு ஒப்புக் கொண்டது.

   அது போல் நரி தினமும் விலங்குகள் இருக்கும் இடத்தை பார்த்து வந்து சொன்னது சிங்கம் சென்று வேட்டையாடி உணவை சாப்பிட்டது. சிங்கம் சாப்பிட்டு விட்டு வெளியேறியதும் நரி சென்று மீதம் இருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியாக வரும். இப்படியே நரி மகிழ்ச்சியாக வாழ்கையை கழித்து வந்தது.

   ஒரு நாள் நரி காடு முழுவதும் அலைந்தும் சிங்கத்துக்கு எந்த விலங்கும் சிக்கவில்லை அந்த ஏமாற்றத்தை சிங்கத்திடம் சொல்வதற்காக வந்தது. சிங்கம் கடுமையான பசியுடன் காத்துக் கொண்டு இருந்தது. நரி வந்து சிங்கத்திடம் இன்று உணவு ஏதும் கண்ணில் படவில்லை என்று சொன்னதும் சிங்கத்திற்கு கடும் கோபம் அதற்கு காரணம் அதன் பசி. உடனே சிங்கம் நரியின் மீது பாய்ந்து விட்டது. அவ்வளவுதான் நரிதன் உயிரை விட்டது.



   என்ன தான் நாம் நல்லவன் என்று தீயவர் இடத்தில் நட்பு உறவு வைத்து வந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு குணம் இருக்கின்றது அந்த குணந்தை அவர்கள் ஒரு சமயத்தில் வெளிபடுத்தி விடுவார்கள் நாம் தான் ஜாக்கிரதயாக இருக்க வேண்டும்.
Previous
Next Post »

1 comment:

Post a Comment