ஏமாற்றாதே Tamil moral story

            ஏமாற்றாதே



Tamil story


    ஒரு காட்டில் சிங்கமும் நரியும் ஒரு குகையில் நட்புடன் வாழ்ந்து வந்தன. அந்த சிங்கம் பசித்தால் மட்டும் வேட்டையாடி சாப்பிட்டு வந்தது. சிங்கம் சாப்பிட்டது போக மீதம் இருக்கும் உணவை சிங்கத்தின் நண்பனான நரி உண்டு காலத்தை கடத்தி வந்தது.


   ஒரு நாள் சிங்கம் பக்கத்து காட்டில் இருக்கும் தன் நண்பனை பார்ப்பதற்காக கிளம்பியது. அப்போழுது நரியிடம் இந்த குகையை பத்திரமாக பார்த்துக் கொள் நான் வரும் வரை என்று கூறிவிட்டு சென்றது சிங்கம்.


   இந்த சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்த நரி இந்த வாய்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்து ஒரு தந்திரமான திட்டம் தீட்டியது. மறுநாள் அனைத்து விலங்குகளையும் அழைத்தது. அனைத்து விளங்குகளும் வந்து சேர்ந்தன நரி ஒரு பெரிய பாறை மீது அமர்ந்து கொண்டு பேச தொடங்கியது. இந்த சிங்கம் இனி வேட்டையாட போவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளது இருந்தாலும் அதற்கு பசிக்கும் அல்லவா அந்த நேரத்தில் அது கர்ஜிக்கும் அப்போது யாராவது ஒருவர் உணவாக வந்து விட வேண்டும் என்று உத்தரவு போட்டது நரி. அனைத்து விளங்குகளும் ஏற்றுக் கொண்டு சென்று விட்டன.

Tamil story



   அடுத்த நாளில் இருந்து நரி உள்ளிருந்து கர்ஜிக்கும் அந்த சமயத்தில் ஏதாவது ஒரு விலங்கு உணவாக உள்ளே செல்லும் நரி அதை அடித்து சாப்பிட்டு வந்தது. நரி நன்கு உடல் பருத்து அதிக திமிருடன் இருந்தது.


   ஒரு நாள் ஒரு பெரிய கொழுந்த மானை தின்று விட்டு படுத்து இருந்தது. சிங்கம் வெளியே வராமல் இருப்பது அனைத்து விலங்குகளுக்கும் சந்தேகத்தை உண்டாக்கியது. அதனால் அனைத்து விலங்குகளும் சேர்ந்து ஒரு பெண் நரியை குகையின் முன் நின்று ஊலையிட செய்தன. அதுவும் அவ்வாறே செய்தது. தன் இனத்தின் சத்தம் கேட்டவுடன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஊலையிட்டவாறே வெளியே வந்தது நரி வந்தது தான் தாமதம் அனைத்து விலங்குகளும் சேர்ந்து அடித்து கொன்று விட்டது.


நீதி : உழைக்காமல் வாழ வேண்டும் என்று நினைத்தால் கடைசியில் இது தான் கதி.

Previous
Next Post »

No comments:

Post a Comment