கொக்கும் ஆமையும்
ஒரு காட்டில் உள்ள குளத்தில் ஒரு ஆமை வாழ்ந்து வந்தது. அதே குளத்தில் ஒரு கொக்கு கூட்டமும் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்தது.
அந்த குளத்தில் வாழ்ந்த கொக்குகள் இரண்டிற்கும் ஆமைக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பானது நீண்ட நாள் நட்பாக மாறியது. ஆமை தண்ணீரில் இருந்து வெளியே வந்து கொக்குகளோடு பேசிக் கொண்டு இருக்கும்.
இப்படியே தொடர்ந்த அந்த உறவுக்கு ஒரு ஆபத்து வந்தது. அது கோடை காலம் என்பதால் குளத்தில் நீர் வற்ற தொடங்கி இருந்தது. அதில் வாழ்ந்த உயிரினங்கள் அனைத்திற்கும் ஆபத்தும் வந்துவிட்டது.கொக்கு ஆமையிடம் பேசிக் கொண்டு இருந்தது நாங்கள் பக்கத்து காட்டில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் இருக்கிறது அங்கு செல்வதாக நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்று கூறியது.
ஆமை கொக்கிடம் சொன்னது என்னால் அங்கு வர இயலாது நீங்கள் அங்கு பறந்து சென்று விடுவீர்கள் என்னால் எப்படி முடியும் என்று வருத்தமாக கூறியது. அதற்கு அந்த கொக்குகள் நாங்கள் உன்னையும் அழைத்து செல்வதாக முடிவெடுத்துள்ளோம் என்று கூறியது. அதை கேட்ட ஆமைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் எப்படி முடியும் என்ற சந்தேகம் ஆமைக்கு அதை கொக்குகளிடம் கேட்டது. கொக்குகளும் அதற்கான விளக்கத்தை கொடுத்தன. கிளம்பும் நேரம் வந்தது.
ஏமாற்றாதே click here
கொக்குகள் இரண்டு ஒரு குச்சியை கொண்டு வந்து அதன் இரண்டு முனைகளையும் தங்கள் அலகுகளால் பிடித்து கொண்டன ஆமையை நடுவில் பிடித்துக்கொள் என்று சொல்லிவிட்டு, நடு வானில் பறக்கும் பொழுது வாயை திறந்தால் பிறகு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு ஆமையை தூக்கிக் கொண்டு பறக்க ஆரம்பித்தன கொக்குகள்.
Foolish fox click here
உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது ஆமை கீழே பார்த்தது அதால் சந்தோஷத்தை அடக்க முடியாமல் ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தது அவ்வளவுதான் சில வினாடிகளில் ஆமை தரையில் கிடந்தது.முதுகுபுறமாக விழுந்ததால் சாகவில்லை.
மீண்டும் கொக்குகள் வந்து ஆமையை தூக்கிக் கொண்டு குளத்திற்கு சென்றன. அங்கு சென்று பல காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தன நண்பர்களாக.
என்றும் அன்புடன்
சுப்ரமணிய சங்கர்.
No comments:
Post a Comment