ஆமையின் பொறுமை
ஆற்றங்கரை ஒன்றில் ஆமை ஒன்று அங்கும் இங்கும் நீந்தி விளையாடிக் கொண்டு இருந்தது. ஆமை ஆற்றின் கரையில் இருந்து சற்று உள்ளே சென்றது அப்பொழுது எங்கிருந்தோ ஆற்று நீரில் அடித்து கொண்டு தேள் ஒன்று ஆமையின் முதுகில் ஏறியது.
Tamil moral story click here
ஆமையிடம் தேள் என்னை மண்ணித்துவிடுங்கள் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்னை எப்படியாவது காப்பாற்றி கரை சேர்த்து விடுங்கள் என்று கெஞ்சியது. இதை கேட்ட ஆமைக்கு இறக்க குணம் வந்து கொண்டு போய் விடுவதாக சம்மதம் தெரிவித்தது. தேள் ஆமையை கெட்டியாக பிடித்துக் கொண்டது. இரண்டும் கரையை நோக்கி புறப்பட தயாராயின.
ஆமை கரையை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது தேளுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்து விட்டது, இந்த ஆமையின் மேல் ஓடு கடினமாக உள்ளது கொட்டினால் வலிக்குமா என்று. தன் சந்தேகந்தை தீர்த்துக் கொள்வதற்கு ஆமையின் ஓட்டின் மேல் தன் கொடுக்கால் கொட்டியது. இதை பார்த்துக் கொண்டிருந்த ஆமை, இது தேளின் குணம் என்று கண்டு கொள்ளாமல் சென்று கொண்டிருந்தது.
மேலும் சிறிது தூரம் சென்றவுடன் தேளுக்கு இன்னும் ஒரு முறை கொட்டிப் பார்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. மறு முறை கொஞ்சம் அழுத்தி பலமாக கொட்டியது. இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆமை தேளின் மேல் இருந்த பரிதாப எண்ணம் நீங்கி நீரில் ழூழ்கியது. தேள் ஆற்றில் அடித்து சென்று விட்டது.
நீதி : ஆபத்தில் உதவி செய்பவர்களை சோதனை செய்து பார்க்க கூடாது.
என்றும் அன்புடன்
சுப்ரமணியசங்கர்
No comments:
Post a Comment