நான்கு மாடும் புலியும் || Tamil stories for kids

                      நான்கு மாடும் புலியும்

www.tamilstory.in


ஓர் அடர்ந்த காடு, அந்த காட்டில் நான்கு பசுக்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தன. அவைகள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தன.

   புல் மெய்வதற்காக சென்றாலும், இரவில் ஓய்வு எடுப்பதற்கு சென்றாலும், ஒன்றாகவே இருந்து வந்தன. அதனால் இந்த நான்கு பசுக்களையும் எந்த மிருகத்தாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.

   அப்படி ஏதாவது மிருகங்கள் வேட்டையாட வந்தால் இந்த நான்கும் ஒன்றாக சேர்ந்து அவற்றை விரட்டி அடித்து விடும். இப்படியாக நாட்கள் கடந்தன.

www.tamilstory.in


   இவைகள் ஒன்றாக இருப்பதை புலி ஒன்று பார்த்தது. பலமுறை முயற்சி செய்தும் அந்த பசுக்களை இந்த புலியால் வேட்டையாட முடியவில்லை. அதனால் இந்த புலி ஒரு திட்டம் தீட்டியது. எப்படியாவது இந்த பசுக்களை பிரித்து விட்டால் நாம் அவற்றை வேட்டையாடி விடலாம் என்று ஒரு திட்டம் போட்டது.

   அந்த புலியின் திட்டத்தின் படியே ஒன்றாக இருந்த நான்கு பசுக்களும் திசைக்கு ஒன்றாக தனித்தனியே சென்று விட்டது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புலியானது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளாக தனித்தனியே வேட்டையாடி கொன்று விட்டது.

www.Tamil story.in


    கடைசியாக இருந்த பசுவும் அப்பொழுதுதான் உணர்ந்தது. நாம் ஒன்றாக இருந்திருந்தால் இந்த புலியால் நம்மை நெருங்க கூட இயலாது, நாம் பிரிந்து சென்ற காரணத்தால் இந்த புலி அனைத்தையும் வேட்டையாடி விட்டு இப்பொழுது நம்மையும் கொல்லப்போகிறது, என்ன பயன் புலியை நம்மால் வெல்ல முடியாது. கடைசியாக தன் உயிரையும் புலி இடம் கொடுத்தது.


 இந்த கதையின் நீதி : ஒற்றுமையே பலம்

Previous
Next Post »

1 comment:

Anonymous said...

👏👏👏👏

Post a Comment