Tamil story | Tamil comedy story

                மனைவி அமைவதெல்லாம் 

https://www.tamilstory.in/


   எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்த போது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதை பறிகொடுத்தார். அவள் மானிடப் பெண் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்துவிட்டது. 

    அந்த மானிடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனும் ஆனார் எமதர்மராஜன்.

   அவர் மணந்த பெண் மிகவும் நல்லவள். நாளாக நாளாக எமனுக்கு அந்த மானிடப் பெண் மீது ஒரு சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்கதியாக விட்டு விட்டுப் போக மனம் வரவில்லை. இந்த நினைப்பிலேயே தத்தளித்துக் கொண்டிருந்தார்.

https://www.tamilstory.in/


   மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மகனிடமே பேசினார் மகனே நீ சிறந்த வைத்தியனாக வேண்டும் மரணத்தருவாயில் இருப்பவரை கூட நீ காப்பாற்ற முடியும். எப்படி தெரியுமா ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன் உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன் நான் அங்கு இருந்தால் நீ வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லை என்றால் தைரியமாக மருந்து கொடு அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் உயரும் என்றார். 

    எமதர்மராஜன் மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அழைத்து கட்டித்தழுவி கண்ணீர் விட்டு அங்கிருந்து சென்று விட்டார். மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படிப்பட்டவன் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூட சாகவில்லை எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

   யாருக்காவது வைத்தியம் செய்ய போகும்போது எதிரில் அப்பாவை பார்த்து விட்டால் கும்பிட்டு விட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியம் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது. கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசனின் மகள் நோய்வாய்ப்பட்டால் யார் வைத்தியம் பார்த்தும் பலன் இல்லை. இவனை அழைத்தார்கள் என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாக தருகிறேன் மேலும் ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் அந்த ராஜா.

https://www.tamilstory.in/


   அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி உள்ளே எமன் (அப்பா) நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள், ஆனால் பிழைத்து விட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும். இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது.

    பளிச்சென்று ஒரு யோசனை வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா அம்மா அப்பா (எமன் ) உள்ளே இருக்கிறார். ரொம்ப நாள் அப்பாவை காணும் காணும் என்று தேடினாயே இங்கேதான் இருக்கிறார் என்று அலறினான்.

    அவ்வளவுதான் துண்டைக் காணும் துணியை காணும் என எமன் ஓட்டமாக ஓடியே விட்டான்.

 கட்டுனது எமனாக இருந்தாலும் இல்லை எவனாய் இருந்தாலும் பொண்டாட்டிக்கு பயந்து தான் ஆக வேண்டும்.

   மனைவி அமைவதெல்லாம் அந்த இறைவன் கொடுத்த வரம்.




என்றும் அன்புடன்

சுப்ரமணிய சங்கர்

Previous
Next Post »

1 comment:

Anonymous said...

ha ha ha

Post a Comment