நம்பிக்கை
இந்த உலகத்தையே ஜெயிக்க வேண்டும் என்று புறப்பட்டார் அலெக்சாண்டர். ஒரு கட்டத்தில் சிட்னஸ் நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கடுமையான வியாதி வந்துவிட்டது.
அவர் கூடவே வந்திருந்த கிரேக்க வைத்தியர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த நோயை குணப்படுத்த முடியவில்லை. அது எந்த வகையான நோய் என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
ஏனென்றால் இது அந்தப் பகுதியிலேயே இருப்பவர்களுக்கு வரக்கூடிய ஒரு வினோதமான நோய் ஆகையால் அந்த கிரேக்க வைத்தியர்களால் இந்த நோயை குணப்படுத்த முடியவில்லை.
நான்கு மாடும் ஒரு புலியும் click here
அலெக்சாண்டர் இருப்பதோ எதிரியினுடைய இடம். பாரசீக மன்னருடைய ஆளுகைக்கு உட்பட்ட இடம் அது. இந்த வியாதியை குணப்படுத்த என்ன செய்வது என்று அனைவரும் யோசனை செய்து செய்து கொண்டிருந்தனர்.
பாரசீக மன்னரின் அரண்மனை வைத்தியர் வந்து மருந்து கொடுத்தால் இந்த நோய் குணமாவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர், இருந்தாலும் எதிரி நாட்டுடைய வைத்தியரை அழைத்து எப்படி வைத்தியம் செய்வது என்று அங்கிருந்து அனைவரும் தயங்கினர். ஆனால் அலெக்சாண்டரோ அவரை வரவழைத்து வைத்தியம் பார்ப்பது என்று முடிவு செய்தார்.
முடிவு செய்தது மாதிரியே அரண்மனை வைத்தியரையும் அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பி விட்டார். அரண்மனைவைத்தியர் வந்து அலெக்சாண்டரை பரிசோதனை செய்துவிட்டு அலெக்சாண்டருக்கு வந்திருப்பது என்ன வகையான நோய் என்பதையும் கண்டுபிடித்து விட்டார்.
இந்த நோயை குணப்படுத்தி விடலாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை அதற்கு ஒரு மூலிகை ரசம் தயாரித்து கொண்டு வர வேண்டும், இன்று முடியாது நாளை மூலிகை ரசம் தயாரித்துக் கொண்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
சொன்னது மாதிரியே ரசம் தயாரித்து மறுநாள் கொண்டு வந்து விட்டார். இதற்கு இடையில் அலெக்சாண்டர் உடைய தளபதிகளில் ஒருவர் ரகசியமாக எச்சரிக்கை கடிதம் ஒன்று கொடுத்து அனுப்பி இருந்தார். அதில் அந்த வைத்தியர் கொண்டுவரும் மருந்தில் விஷம் இருப்பதாகவும், அந்த மருந்தை அருந்த வேண்டாம், என்றும் அதில் எழுதி இருந்தது.
காதல் கவிதை click here
இதை அலெக்சாண்டர் பார்த்துவிட்டு எந்தவித சந்தேகமும் இன்றி வைத்தியர் கொடுத்த மூலிகை ரசத்தை கடகடவென்று குடித்துவிட்டார். அதன் பிறகு அந்த கடிதத்தில் இருந்த விஷயத்தை அந்த வைத்தியரிடம் கூறினார். அதைக் கேட்ட வைத்தியர் ஒரு நொடி திகைத்து நின்று விட்டார் தன்மீது அலெக்ஸாண்டர் வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து அந்த வைத்தியருக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
வைத்தியர் கொடுத்தது என்னவோ சுத்தமான மூலிகைரசம் தான், அதில் விஷம் எதுவும் கலக்கவில்லை, அதன் பிறகு அந்த வைத்தியரை பார்த்து அலெக்சாண்டர் கூறினார், நம்பிக்கை என்ற அச்சாணியை வைத்துதான் இந்த உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது, எனக்கு எதிரியாக இருந்தாலும் பாரசீக மன்னர் மிகவும் பெரியவர். அப்படிபட்டவர் அரண்மனையில் இருக்கும் அரண்மனை வைத்தியர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும், தொழில் நேர்மை இல்லாதவராக இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் அவரை அரண்மனை வைத்தியராக வைத்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான் நான் வைத்தேன், என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அதற்கு தகுந்தாற்போல் நீங்களும் நடந்து கொண்டீர்கள் என்று அலெக்சாண்டர் கூறினார் இதுதான் மானுட நம்பிக்கை என்பது
ஒருவர் மீது நம்பிக்கை வைத்தால் அது உண்மையானதாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் நம்பிக்கை வைக்க கூடாது...
என்றும் ஆன்புடன்
சுப்ரமணிய சங்கர்......
No comments:
Post a Comment