Tamil stories for kids || Tamil moral stories

 

Tamil stories for kids

ஒரு காட்டின் வழியாக ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான், இரவு நேரம் ஆகி விட்டதால் எங்காவது தங்கிவிட்டு விடிந்த பிறகு போகலாம் என்று ஒரு பாதுகாப்பான இடத்தை தேடி அங்கு சென்று அமர்ந்து கொண்டான்.

   அவன் இருந்த இடத்தின் அருகில் ஒரு புதரில் இரண்டு கால்களையும் இழந்த நரி ஒன்று இருந்தது. இவனுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்தது, இந்த இரண்டு கால்களை இழந்த நரி உணவு தேடி எங்கும் போக முடியாது, இதற்கு எப்படி உணவு கிடைக்கிறது என்று.

   மறுநாள் விடிந்த பின்பும் வெகு நேரம் காத்திருந்தான். ஒரு சிங்கம் ஒன்று தான் வேட்டையாடிய உணவை நரி மறைந்திருந்த புதரின் அருகில் கொண்டு வந்து போட்டு தின்று விட்டு மீதி உணவை அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டது.click here

   உடனே அவன் மனதில் நினைத்துக் கொண்டான் இந்த நரிக்கு இறைவன் உணவு கொடுக்கின்றான், என்னே இறைவனின் கருனையோ கருனை, இனி நாமும் எங்கும் அலைய வேண்டாம் நமக்கும் இறைவன் படியளப்பார் என்று காட்டை விட்டு வீட்டிற்கு சென்றான் எங்கும் வெளியே போகாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தான்.

   இப்படியே சில நாட்களில் உணவு ஏதும் கிடைக்காமல் மெலிந்து விட்டான். அந்த நரிக்கு படியளந்த நீ எனக்கு ஏன் படியளக்கவிள்ளை என்று இறைவனிடம் புலம்பிக் கொண்டிருந்தான். அப்போது அசரீரி ஒன்று கேட்டது. நீ ஏன் அந்த நரியாக இருக்க வேண்டும், உணவு கொடுத்த சிங்கமாக இரு என்றது.

  நாம் இந்த சிங்கத்தை போன்று பலருக்கும் பயன் படுமாறு வாழ வேண்டும் என்பதே இக்கதை.

Previous
Next Post »

No comments:

Post a Comment