குறங்கும் முதலையும்
ஒரு ஆற்றங்கறையில் உள்ள நாவல் மரத்தில் குறங்கு கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குறங்குகள் நீண்ட நாட்களாக அங்கு வசித்து வந்தது. அதே ஆற்றங்கறையில் ஒரு முதலையும் ஒய்வு எடுப்பதற்கு கறை ஒதுங்குவது வழக்கம். இப்படியான நேரத்தில் அந்த முதலைக்கும் குறங்குகளுக்கும் நட்பு உண்டாயிற்று.
அந்த ஆற்றங்கறையில் உள்ள நாவல் மரத்தில் பழம் பழுக்க தொடங்கி இருந்தது. குறங்குகள் நாவல் பழத்தை சுவைத்து அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த முதலை தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த ஒன்றிரண்டு பழங்களை சாப்பிட்டு விட்டு அதன் சுவை நாவில் ஒட்டிக் கொண்டது.
உடனே குறங்குகளிடம் கேட்டது இந்த பழத்தின் சுவை மிகவும் அருமையாக உள்ளது இது என்ன பழம் என்று. இது தான் நாவல் பழம் வேண்டுமென்றால் கிளையை உளுக்குகிறோம் சாப்பிடுங்கள் என்று கிளையை உளு க்கியதும் கீழே விழுந்த பழங்களை முதலை சாப்பிட்டு ஓய்வெடுத்து சென்றது.
சில நாட்கள் முதலை வருவதும் ஓய்வு எடுப்பதும் பழம் சாப்பிடுவதுமாக இருந்தது. ஒரு நாள் அந்த முதலைக்கு ஒரு கெட்ட எண்ணம் தோன்றியது. எப்படியாவது இந்த நாவல் பழங்களை சாப்பிடும் குறங்குகளின் ஈரலை சாப்பிட வேண்டும் என்று. அதற்கான ஒரு திட்டத்தையும் தயார் செய்துவிட்டது. குரங்குக்கு விருந்து வைப்பதாக சொல்லி நடு ஆற்றுக்கு அழைத்து வந்து கொன்று ஈரலை சாப்பிட்டு விடலாம் என்பது தான் அதன் திட்டம். Click here
அன்று கறைக்கு வந்ததும் நாவல் பழத்தை சாப்பிட்டு விட்டு தினமும் நீங்களே எனக்கு விருந்து வைக்கிறீர்கள் இன்று நான் உங்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன் நீங்கள் அனைவரும் எனது இருப்பிடத்திற்கு வாருங்கள் வந்து விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றது முதலை.
குறங்குகளும் நண்பன்தானே என்று ஒப்பு கொண்டன, ஆனால் நாங்கள் எப்படி அந்த பக்கம் வருவது என்றன. அதற்கு முதலை ஒவ்வொருவராக என் முதுகில் ஏறிகொள்ளுங்கள் நான் என் இருப்பிடத்தில் கொண்டு விட்டு விட்டு மீண்டும் வந்து அடுத்தவரை அழைத்து செல்கிறேன் என்றது.
குறங்குகள் ஒத்துக் கொண்டு முதலில் குரங்குகளின் தலைவன் முதலையின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு சென்றது. சிறிது தூரம் சென்றதும் முதலை தனது திட்டத்தை குறங்கிடம் சொன்னது. உடனே பயந்து போன குறங்கு உடனே தப்பிப்பதற்கு வழியை தேடியது. சமயோசித்தமாக குறங்கு சற்றும் பதற்றம் இல்லாமல் இதை அங்கேய சொல்லாமல் இங்கு வந்து சொல்கிறீர்களே உங்களுக்கா இல்லை என்பேன் இன்று காலை தான் ஈரலை கழற்றி காய வைத்தேன் நீங்கள் அழைத்த அவசரத்தில் மறந்து மரத்திலே விட்டு விட்டு வந்து விட்டேன் என்றது குறங்கு. Click here
உடனே அந்த முட்டாள்முதலை சரிகறைக்கு அழைத்து செல்கிறேன் அங்கே சென்று எடுத்துக் கொடு என்றது. குறங்கு சற்றும் தாமதிக்காமல் சரி சீக்கிரம் செல் வேறு யாராவது சென்று எடுத்து விட போகிறார்கள் என்றது. உடனே முதலை வேகமாக நீந்தி சென்றது.
கறையை நெறுங்குவதற்கு முன்னறே குறங்கு தாவி மரத்தின் மீது ஏறி கொண்டது. நடந்ததை தன் நண்பர்களிடம் கூறியது, அனைத்தும் உஷாராகியது. முதலையிடம் யாராவது ஈரலை கழட்டி வைக்க முடியுமா முட்டாள்முதலையே எங்களை ஏமாற்ற பார்கிறாய் உனக்கு உதவி செய்ததற்கு நீ நன்றி கெட்டு நடந்து கொண்டாய் என்று திட்டியது குறங்குகள். நன்றி கெட்ட முதலை வருத்தத்துடன் திரும்பி சென்றது.
No comments:
Post a Comment