நரியும் மானும்
ஒரு காட்டில் நரியும் மானும் நண்பர்களாக இருந்து வந்தனர். அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது அக்காட்டுக்குள் மழைவருவதுபோல் இருந்தது.
மழை வருவதைக்கண்டு இருவரும் ஒரு குகைக்குள் ஒடிப்போய் நின்று கொண்டனர். அந்த குகைக்கு உள்ளே சிங்கம் ஒன்று வேட்டையாடிய உணவை உண்டுவிட்டு இரத்த கரையுடன் தூங்கிக்கொண்டு இருந்தது.
சிங்கத்தை கண்ட உடன் இருவரும் வெளியே வர முயற்சி செய்தனர்.அப்பொழுது மான் மட்டும் சிங்கத்திடம் மட்டிக்கொ ண்டது.அதனை கண்ட நரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
சிங்கத்திடம் ராஜா என் நண்பனை விட்டுவிடுங்கள் என்று முரையிட்டது.அதற்கு சிங்கம் உன் நன்பனை விட்டுவிட்டால் எனக்கு நீ என்னத்தருவாய் என்று கேட்டது சிங்கம்.
நிங்கள் என்னை வைத்து கொள்ளுங்கள் என்று சொன்னது நரி அதற்கு சிங்கமும் ஒத்துக்கொண்டது.பிறகு நரியை குகைக்குள் வரவைத்தது மானை வெளியே விட்டது.
மானிடம் சிங்கம் உன் நண்பனை நான் இன்று உணவக உண்ண மாடேன் நாளைய உணவக உன் நண்பனை உண்பேன் என்று கூறியது சிங்கம்.
மான் என்ன செய்வது என்று தெரியாமல் குகைக்கு வெளியே காத்திருந்தது.சிங்கம் தூங்க அறபித்தது இதுதான் சமயம் என்று நரி அங்கிருந்து தப்பித்து விட்டு வெளியே வந்தது . பிறகு இரண்டு நண்பர்களும் தங்கள் இடத்திற்கு சென்று மகிழ்சியாக இருந்தனர்.
No comments:
Post a Comment